வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 45 லட்சம் ரூபாயை பறித்த பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

நிலம் விற்பனை செய்து வைத்திருந்த பெண்ணிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் பணத்தை வீடு புகுந்து அபகறித்து சென்ற பாஜக மாநில நிர்வாகி மின்ட் ரமேஷை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
 

Tamilnadu BJP state executive arrested for breaking into house and extorting money from woman

பெண்ணை மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி

சென்னை அம்பத்துர் பகுதியை சேர்ந்த  நாராயணி என்ற பெண் தனது 3 சகோதரிகள் தங்களுக்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள தனது 78 சென்ட்  நிலத்தை விற்பனை செய்ய முனைந்துள்ளனர். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். ஆனால், நல்ல விலைக்கு வந்ததால், வேறு நபரிடம் நிலத்தை நாராயணி விற்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மிண்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளி நாகர்கோவில் மகேஷ் ஆகியோர், நாராயணியின் வீட்டிற்குள் புகுந்து,

Tamilnadu BJP state executive arrested for breaking into house and extorting money from woman

பாஜக நிர்வாகி மீது புகார்

45 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறுப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நாராயணி மற்றும் தரகர் பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கடந்த திங்களன்று மிண்ட் ரமேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அவரை வழி அனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பிய மிண்ட் ரமேஷை, கொரட்டூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Tamilnadu BJP state executive arrested for breaking into house and extorting money from woman

எச்சரிக்கை விடுத்த போலீஸ்

மேலும், கூட்டாளியான நாகர்கோவில் மகேஷையும் போலீசார் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மின்ட் ரமேஷ் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஆவடி காவல் ஆணையர் அருண், ஆவடி காவல்சரகத்திற்குட்பட்ட மக்களை அச்சுறுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் முயற்சித்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்? எப்போது தெரியுமா? அலறும் எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios