திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரசன்னா இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து தமிழன் பிரசன்னா என்று அழைத்து கொள்வார். மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடியவர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு  பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை பெற்றவர். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிரசன்னா உருவம் கொண்ட ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று கடும் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோ குறித்து தமிழன் பிரசன்னா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. 

பிரசன்னாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்ப அவரோ அதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காதது இதை உறுதி படுத்துவதாக இருக்கிறது. அவருடன் இருக்கும் பெண் பிரபல தொலைக்காட்சியில் முக்கிய நபராக வலம் வரக்கூடியவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பிரச்சனையை பெரிதாக்கி சமூக ஊடகங்களில் வெளிவரச் செய்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா இதே போன்றதொரு சிக்கலில் மாட்டியிருப்பது அக்கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.