காவிரியை சொந்தம் என்று சொல்வதற்கு கர்நாடகாவிற்கு தகுதி இல்லை‌‌. தமிழ்நாடு முதலமைச்சர் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதோடு முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கையும் வைத்து இருக்கிறேன். காவேரி நீர் என்பது நமது உரிமை அது அவர்கள் வழங்கும் பிச்சை அல்ல. தமிழ்நாடு அரசுக்கு எதிராக கர்நாடகா அரசு செய்துவரும் துரோகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறினார் மேலும் காவிரியை சொந்தம் என்று சொல்வதற்கு கர்நாடகாவிற்கு தகுதி இல்லை‌‌ எனவும் தெரிவித்தார்.

ராணுவ கட்டுப்பாட்டிற்கு அணையை எடுத்துக் கொள்ள தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். காவேரி நீர் மேலாண்மை வாரியத்துடன் ராணுவம் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டு நீரை திறக்க வேண்டும்” என்று கூறினார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!