முகத்துக்கு நேரா அடுக்கு மொழியில் ஓவர் புகழ்ச்சி... எல். முருகனை வெட்கத்தில் நெளிய வைத்த டி.ராஜேந்தர்.
அதில் பேசிய டி. ராஜேந்தர், தமிழ் மண்ணில் தமிழ் கடவுளின் பெயரில் வேலாக பயந்து டெல்லிக்கு சென்று அமைச்சராகி இருப்பவர் எல்.முருகன். அவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் நேரில் வந்து இருக்கிறேன்.
தேர்தலுக்கு முன்பே எல். முருகனை சந்தித்து அவரது வேல் யாத்திரைக்கு வாழ்த்து கூறியவன் நான் என நடிகர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். கொரோனாவால் தமிழ் சினிமா செத்துவிட்டது என்றும், திரைப்படங்கள் எடுப்பதற்கு அரசு மானியம் தர வேண்டும் என்றும் அவர் அப்போது கோரிக்கை வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான்கு மாநிலங்களை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அதில் மத்திய அமைச்சர் எல்.முருகள் கலந்து கொண்டார். அப்போது, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விலங்குகள் நல வாரிய தணிக்கைக்குழு உறுப்பினரை தமிழகத்தில் நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: என் மீது வெறும் 10 மாதங்களில் 76 வழக்குகள்.. குமுறிய அண்ணாமலை.
அதில் பேசிய டி. ராஜேந்தர், தமிழ் மண்ணில் தமிழ் கடவுளின் பெயரில் வேலாக பயந்து டெல்லிக்கு சென்று அமைச்சராகி இருப்பவர் எல்.முருகன். அவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் நேரில் வந்து இருக்கிறேன். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நான் கலந்துகொள்ள மல் போயிருந்தால் அது தவறாகிவிடும், நான் வழிபடும் முருகனின் பெயரை அவர் வைத்துள்ளார், அதனால் நான் ஓடோடி வந்தேன். தேர்தலுக்கு முன்பே எல். முருகனை சந்தித்து, அவரது வேல் யாத்திரைக்கு நான் வாழ்த்து கூறினேன். பிரதமர் மோடி ஒரே இந்தியா ஒரே மொழி என்று சொல்லி ஜிஎஸ்டி வரி விதித்தார். தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தினோம். மத்திய அரசு ஜிஎஸ்டி 9 சதவீதம், மாநில அரசு ஜிஎஸ்டி 9 சதவீதமாக கேட்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசை குறை சொல்லியே இந்த விஷயத்தில் சாதித்த தமிழகம். செம்ம பிளான்.. 5.2 கோடி பேருக்கு தடுப்பூசி.
கேளிக்கை வரி கூடாது என கடந்த ஆட்சியில் நாங்கள் போராடி பார்த்து விட்டோம், எங்களுக்கு சோறு போட்டது தமிழ் சினிமாதான், கொரோனாவால் தமிழ் சினிமா செத்துவிட்டது. எனவே திரைப்படங்கள் எடுப்பதற்கு அரசு மானியம் தர வேண்டும், அதேபோல் தூர்தர்ஷனில் படங்களை வாங்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தென்னிந்திய தயாரிப்பாளர்கள் மொழிகளை கடந்து இந்திய அளவில் படம் எடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் நாங்கள் இந்தி படங்களை எடுத்தாலும், இங்கேயே அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும். அதேபோல் ஓடிடி தளத்தில் சிறிய படங்கள் வாங்கப்படுவதில்லை, தணிக்கை குழுவில் திரையுலகை சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.