என் மீது வெறும் 10 மாதங்களில் 76 வழக்குகள்.. குமுறிய அண்ணாமலை.
அதாவது, இந்திய அரசியலில் பல பாகுபலிகள் உள்ளனர், ஒருவர் சிறைக்கு சென்று இருப்பார், ஆனால் அவர் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவார், ஒருவர் குற்றவாளி என்று அனைவருக்கும் நன்கு தெரியும், ஆனால் அவர் தான் வெற்றி பெறுவார்.
இந்திய அரசியலில் நிறைய பாகுபலிகள் உள்ளனர் என்றும், குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களில் தன் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிஏஏஎஸ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் வெற்றிபெறும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார்.
இதையும் படியுங்கள்: நடுத்தர குடும்பங்களின் வீடு கட்டும் கனவில் மண்.. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 70 முதல் 100 ரூபாய் உயரும் அபாயம்.
அதாவது, இந்திய அரசியலில் பல பாகுபலிகள் உள்ளனர், ஒருவர் சிறைக்கு சென்று இருப்பார், ஆனால் அவர் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவார், ஒருவர் குற்றவாளி என்று அனைவருக்கும் நன்கு தெரியும், ஆனால் அவர் தான் வெற்றி பெறுவார். மத்திய மாநில அரசு முழு திறனை வெளிப்படுத்த வில்லை எனில் பாகுபலிகள்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இது குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவார், தமிழகத்தில் மக்கள் இன்னும் அரசியல் முதிர்ச்சி அடையவில்லை, 1 லட்சத்து 94 ஆயிரம் வாக்குகள் தான் திமுகவின் வெற்றியை முடிவு செய்துள்ளது. நமது நாட்டில் தேர்தல் நடத்தும் முறை மாறுபட்டு வருகிறது, கடந்த 10 மாதங்களில் மட்டும் என் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கூட ஆர்ப்பாட்டம் செய்ததற்காக என் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் கூறுகிறார்கள். அதற்காக நான் குற்றவாளி ஆகிவிடுவேனா.
இதையும் படியுங்கள்: கடலில் மூழ்கிய படகு.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீமான்.. அரசுக்கு கண்ணீர் கோரிக்கை.
இங்குள்ள அரசியல் தேர்தல் அமைப்பு இவ்வாறு உள்ளது. அமெரிக்காவைப் போல நமது ஊரிலும் வேட்பாளர்களை நேரடியாக அமர வைத்து விவாதம் நடத்தினால் சட்டை, பேண்ட்தான் கிழியும், 30 நாளில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வரவில்லை எனில் அடுத்த ஒவ்வொரு நாளும் 150 ரூபாய் உயரும் அபராத முறை வசூலிக்கும் திட்டம் கர்நாடகாவில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு சின்ன ஆவணம் வாங்குவதற்கு கூட லஞ்சம் வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.