Asianet News TamilAsianet News Tamil

தமிழக பாஜகவை 2 வருடம் என் கையில் கொடுங்கள்...இந்து விரோதிகளை திகார் சிறையில் பார்ப்பீர்கள்- சுப்பிரமணிய சுவாமி

தமிழக பாஜக ஓர் கோழை. குருமூர்த்தியின் வாய் கட்டுண்டு கிடக்கிறது. எனவே தமிழக பாஜகவை 2 வருடங்கள் என் கையில் கொடுங்கள் பின் தமிழ் நாட்டின் இந்து விரோதிகளை திகார் சிறையில் காணலாம்  என ஆவேசமாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். 
 

Subramanian Swamy criticized Tamil Nadu BJP as a coward Kak
Author
First Published Sep 6, 2023, 1:34 PM IST

உதயநிதியின் சனாதன பேச்சு

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என அமைச்சர் உதயநிதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தெரிவித்திருந்தார்.  அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதியின் தலைக்கு பத்து கோடி ரூபாய் பரிசும் சாமியார் ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தரபிரதேச காவல்நிலையத்தில் உதயநிதி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Subramanian Swamy criticized Tamil Nadu BJP as a coward Kak

மிரட்டல் விடுத்த சாமியார்

இந்தநிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, திமுக எதிர்ப்பு தமிழ் அறிவுஜீவிகள் தங்களின் வாலை சுறுட்டிகொண்டு பதுங்க ஓடிகொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜக ஓர் கோழை. குருமூர்த்தியின் வாய் கட்டுண்டு கிடக்கிறது எனினும் மோடியின் தர்பாரில் அவர் தமிழ் தலைவராக தன்னை வெளிபடுத்திகொண்டுள்ளார்.

திகார் சிறையில் இந்து விரோதிகள்

தமிழக பாஜகவை 2 வருடங்கள் என் கையில் கொடுங்கள் பின் தமிழ் நாட்டின் இந்து விரோதிகளை நீங்கள் திகார் சிறையில் காணலாம் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நேற்று வெளியிட்ட பதிவில், "அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தி பேசினால், தமிழக அரசை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் இறங்குவேன். 

Follow Us:
Download App:
  • android
  • ios