மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என்ற அளித்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று தமிழக பாஜக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிப்பை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். இதன்படி வீடுகள். தொழிற்கூடங்கள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் என எல்லா தரப்புக்கும் மின் கட்டணம் உயர உள்ளது. குடியிருப்புகளுக்கு ரூ.55 முதல் சுமார் 600 வரை மின் கட்டணம் உயர உள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியத்துக்கு அரசு மனு அனுப்பியுள்ளது. மேலும் மின் கட்டண உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 22 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க: நான் சொல்லிதான் இபிஎஸ்ஸோடு ஓபிஎஸ் சேர்ந்தார் என்று மோடி சொன்னாரா.? ஓபிஎஸ்ஸை டாராக கிழித்த மாஜி அமைச்சர்!

ஆளும் திமுக அரசு மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துனை தலைவர் கே.பி. ராமலிங்கம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டன. இயல்பு நிலை இப்போதுதான் திரும்பும் நிலையில், திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே, சொத்து வரியையும் உயர்த்திவிட்டார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

இதையும் படிங்க: மக்களவை தேர்தல் முடியட்டும்.. மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டில்.. !! ட்விஸ்ட் வைத்து டரியலாக்கும் நயினார்..

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தது. ஆனால், மாநில அரசு வரியைக் குறைத்துக் கொள்ள முன்வரவில்லை. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு காண வேண்டும் என்ற நோக்கில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் மத்திய அரசு கடிதம் எழுதியது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நிர்பந்தித்து எந்தக் கடிதமும் எழுதவில்லை. எனவே, மத்திய அரசு மீது குறை கூறுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறு அளித்தார்கள். அந்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் பாஜக சார்பில் தொடர்ந்து நடக்கும்” என்று கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!