Asianet News TamilAsianet News Tamil

இந்திய துணை கண்டத்திலேயே.! ஸ்டாலின் தான்.. இந்துத்துவாவை வெளுத்து வாங்கிய ஆ.ராசா!

இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்து மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெகன் மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பதில்லை. இந்திய துணை கண்டத்தில் இந்துதுவாவை எதிர்க்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு. க. ஸ்டாலின் தான். - ஆ. இராசா.

Stalin was a strong opponent of Hindutva said a raja
Author
First Published Jan 1, 2023, 10:41 PM IST

சென்னை மதுரவாயல் வடக்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. இராசா, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், கலைஞருக்கு நற்பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் மதுரவாயல் பறக்கும் சாலையை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 ஆயிரத்தி 611 கோடியே 70 லட்சம் மதிப்பில் ஈரடுக்கு மேம்பாலம் சாலை அமையவுள்ளது.

Stalin was a strong opponent of Hindutva said a raja

இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

கலைஞர் கட்டிமுடித்து இருந்தால் இந்தியிலேயே மிக நீண்ட மேம்பாலம் என்று இருந்து இருக்கும். தற்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் கட்டவுள்ள ஈரடுக்கு மேம்பாலம் ஆசியாவிலேயே மிக நீண்ட பாலம் என அமையவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது என்று பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆ. இராசா, தமிழகம் சாதி, மதம் கடந்து இருந்து வருவதற்கு திராவிட மாடல் ஆட்சி காரணம் என்ற அவர் இதற்காக பாடுபட்டவர்களில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியருக்கு பெரும் பங்கு உண்டு. ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை வளர்க்க 300 கோடி ஒதுகியுள்ளது. 11 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

இதையும் படிங்க..இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!

Stalin was a strong opponent of Hindutva said a raja

ஆனால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கு 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழுக்கு 2 கோடி கூட கிடையாது. ஒன்றிய அரசு பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை கொடுகிறோம் என்ற பெயரில் படிப்படியாக இன்னும் 5 ஆண்டுகளில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் சாதி ரீதியான பணிக்கு அனுப்பி விடுவார்கள்.

இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்து மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெகன் மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பதில்லை. இந்திய துணை கண்டத்தில் இந்துதுவாவை எதிர்க்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு. க. ஸ்டாலின் தான். 2024 ஆம் ஆண்டு முழு அமைச்சரவை மட்டுமல்ல, பிரதமரை யார் என்பது வரை பட்டியல் தயாரிக்க போவது தலைவரின் செனடாப் இல்லம் தான் என்று கூறினார்.

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

Follow Us:
Download App:
  • android
  • ios