இந்துக்களுக்கு வாழ்த்து கூறாமல் ஸ்டாலின் மத அரசியல்... கமலாலயத்தில் கொதித்த அண்ணாமலை.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் முதலமைச்சர் மத அரசியல் செய்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் முதலமைச்சர் மத அரசியல் செய்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாஜக அனைத்து மதத்தினரையும் ஒன்றாகவே பாவிக்கிறது என்றும், அதுதான் பாஜகவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக் கூற வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கண்டித்தனர், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதா மரணத்தில் பல பிரச்சனைகள் இருப்பது உண்மை தான்.. அதை இங்கே சொல்ல மாட்டோம்.. முதல்வர் பகீர் தகவல்.!
சுதந்திர போராட்ட தியாகி புலித்தேவரின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிப்பது இல்லை என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. முதல்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு திமுகதான் விடுமுறை அளித்தது, அப்போது அண்ணா முதலமைச்சராக இருந்தார்.
இதையும் படியுங்கள்: என் வழக்கு, நானே வாதாடுறேன்.. கோர்ட்டில் மாஸ் காட்டிய சவுக்கு.. திமுக எம்பியை வழக்கறிஞராக கேட்டு அதிரடி...
ஆனால் இப்போது விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார், ஆனால் அண்ணாவின் கொள்கைகளிலிருந்து எந்த அளவிற்கு அவர் மாறுபட்டுள்ளார் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும், விநாயகர் சதுர்த்திக்கு இந்து சமய அறநிலைத்துறை வாழ்த்து தெரிவித்திருப்பது ஒன்றும் தவறில்லை, ஒரே ஒரு தவறு முதலமைச்சர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததுதான். இந்த நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை திமுக எம்பி விமர்சிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்ப்பேன் என்று தான் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கையெழுத்துப் போட்டுள்ளார் ஆனால், முதலமைச்சரின் செயல் அதற்கு எதிர்மாறாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில் தவறு ஒன்றும் கிடையாது, வாழ்த்து சொல்லாததன் மூலம் தான் முதலமைச்சர் மத அரசியல் செய்கிறார், ஆனால் பாஜக மத அரசியல் செய்கிறது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, முதலமைச்சர் கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதத்திற்கு வாழ்த்து கூறுவது போல இந்து மதத்திற்கும் வாழ்த்துக் கூறிவிட்டு பாஜகவை விமர்சிக்கட்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.