பாஜக சேர்ந்த நடிகைகள் குறித்து அவதூறு! கைது பயத்தில் கோர்ட் படியே திமுக பேச்சாளர்! நீதிபதி அதிரடி உத்தரவு.!
கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஆர்.கே.நகரில் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக்;- பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார்.
திமுக பொதுக்கூட்டத்தில் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாக பேசிய சைதை சாதிக்கை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஆர்.கே.நகரில் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக்;- பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதையும் படிங்க;- ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?
இந்நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், எந்த நேரத்திலும் சைதை சாதிக் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதை சாதிக் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பெண்களை பற்றி அவதூறான கருத்துகளை மனுதாரர் பேசியுள்ளார். இனிமேல், இதுபோல பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை போலீசார் சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- பாஜக சேர்ந்த நடிகைகள் குறித்து தரக்குறைவான பேச்சு.. கைது செய்யப்படுகிறாரா சைதை சாதிக்?