ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?
பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
குஷ்பூ குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர். மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சாதிக் பேசுகையில்;- பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- குடும்ப அரசியலை பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை.. தமிழிசையை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் நாசர்..!
இதுகுறித்து குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில்;- ஒரு பெண்ணை ஒரு ஆண் ஆபாசமாக பேசும்போது, அவர் எப்படி வளர்க்கப்பட்டார். எந்த மாதிரியான நச்சுத்தன்மையான சூழலில் வளர்க்கப்படுகிறார் என்பதே தெரிய வருகிறது. இம்மாதிரியான ஆண்களே, பெண்ணின் கருப்பையை கொச்சைப்படுத்துகிறார்கள். இம்மாதிரியான ஆண்கள், தங்களை கலைஞரின் தொண்டர்கள் என சொல்லி கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா?" என கேள்வி எழுப்பி திமுக எம்.பி. கனிமொழியை டேக் செய்து இருந்தார். இந்த சம்பவத்திற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி.கனிமொழி;- ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். யார் அப்படி பேசி இருந்தாலும் எங்கு பேசி இருந்தாலும் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் அதை பொறுத்து கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்ப்பாக நான் மன்னிப்பு கோருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள் என பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- "சேலை தான் Modern Style"ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.. என்ன சொன்னார் தெரியுமா..?