குடும்ப அரசியலை பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை.. தமிழிசையை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் நாசர்..!
திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்களும், குடும்ப அரசியல் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்களும், குடும்ப அரசியல் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்;- தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிகவும் சிரமமான விஷயம்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துகள்.
இதையும் படிங்க;- ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா? தமிழிசையை சைலண்டாக வாரிய ராஜீவ் காந்தி..!
அதேநேரம் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணைப் பொதுச்செயலாளர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் என பலரும் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள் என்றார். இவரது பேச்சுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து வந்துள்ளனர். இதனால் குடும்ப அரசியல் குறித்துப் பேச அவருக்குத் தகுதி இல்லை. திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை.
திமுகவின் சோதனை காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி கட்சிக்காகச் சிறை சென்றவர் கனிமொழி. அப்படி கட்சிக்குக் கடுமையாக உழைத்த கனிமொழிக்குத்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது. திமுகவில் உள்ள அனைவரும் ஒரே கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்வித தவறும் இல்லை என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக