பாஜக சேர்ந்த நடிகைகள் குறித்து தரக்குறைவான பேச்சு.. கைது செய்யப்படுகிறாரா சைதை சாதிக்?

 பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Defamation speech: Case against DMK spokesperson Saidai Sadiq

திமுக பொதுக்கூட்டத்தில் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக பிரமுகர் சைதை சாதிக் மீது  சைபர் கிரைம் பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர். மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில்;- பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். 

இதையும் படிங்க;- ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?

Defamation speech: Case against DMK spokesperson Saidai Sadiq

இந்நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Defamation speech: Case against DMK spokesperson Saidai Sadiq

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், சைதை சாதிக் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் முன்ஜாமீன் கோர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios