சாப்பாட்ட பத்தி இவ்வளோ பேசுற திமுக.. அப்படியே இத பத்தியும் பேசலாமே.. சிங்கை ஜி.ராமச்சந்திரன்..!

மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் பேருக்கு  சாம்பார் சாதம், புளியோதரை சாதம் தயார் செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டு வந்தவர்கள் மிக குறைவானவர்களே என்று கூறப்படுகிறது. 

singai ramachandran slams dmk government

அதிமுக மாநாடு வெற்றி, வெற்றியே, இப்படி பேசி அதன் வெற்றியை மறைக்க முடியாது என சிங்கை ஜி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக, மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் பேருக்கு  சாம்பார் சாதம், புளியோதரை சாதம் தயார் செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டு வந்தவர்கள் மிக குறைவானவர்களே என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- உங்க தாத்தாவையே பாத்தவங்க நாங்க! உதயநிதி இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்! சீறும் சி.வி.சண்முகம்..!

singai ramachandran slams dmk government

மாநாடு முடிந்த நிலையில் நாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக டன் கணக்கில் தொண்டர்களுக்காக தயார் செய்த புளியோதரை உணவுகள் கொட்டப்பட்டு கிடந்த காட்சிகள் வைரலாகின. உணவுகளை இப்படி பொறுப்பு இல்லாமல் மாநாட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கொட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஆளுங்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த முறை சாப்பாடு அளவில் கவனமாக இருப்போம் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

singai ramachandran slams dmk government

இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளருமான சிங்கை ஜி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள  டுவிட்டர் பதிவில்;- ஆமா சாப்பாடு வீண் ஆக கூடாது, அது சரி தான். யாரும் வேண்டுமென்றே வீண் செய்யலேயே, அடுத்த முறை கவனமா இருக்கணும், அதுவும் சரி தான், அதோட முடிஞ்சது.

பரோட்டா கடை, Mobile கடை, டீ கடை-னு, கடை கடையா சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கலைனு மதுரையில ஏதாவது ஒரு கடைல சண்டை வந்துச்சா இல்லை பெண்கள் தவறா யாரோ நடந்துட்டாங்கனு complaint பண்ணாங்களா, இல்லை மாநாடு முழுவதும் டாஸ்மாக் bottle-களா கடந்ததா?

 

இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி பண்ணுனது திமுக தான். நம்ம செய்தீல பார்த்தோம். சாப்பாட்ட பத்தி இவ்வளோ பேசுற திமுக நபர்கள், அப்படியே இத பத்தியும் பேசலாமே! எவ்வளவு கண்ணியமா அதிமுக மாநாடு நடந்திருந்தா சாப்பாடு பிரச்சனைய பத்தி இப்படி பேசுவீங்க? காரணம், பேச வேறு எதுவும் இல்லை! மாநாடு வெற்றி, வெற்றியே, இப்படி பேசி அதன் வெற்றியை மறைக்க முடியாது! அடுத்த முறை சாப்பாடு அளவில் கவனமாக இருப்போம், அவ்வளவு தான். முற்று! என கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios