திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு விஜிலா சத்தியானந்த் வெற்றி பெற்றார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டடார். இதனையடுத்து, புதிய மேயராக அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது புவனேஸ்வரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையிலும் அதிமுகவில் சாதாரணத் தொண்டர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால், இப்போது அதிமுகவில் பெண்களுக்கு துளியும் மரியாதை கிடையாது. அதனால் தான் மகளிரணி நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறினர் என்று தெரிவித்தார்.
ஆனால், திமுகவில் இணைந்த அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் என் மண் என் மக்கள் பயணத்தின் போது மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.