Asianet News TamilAsianet News Tamil

பிடிஆர் மீது சேற்றை வாரி இறைக்க முயன்ற எஸ்.ஜி சூர்யா.. ஆதாரத்துடன் பொய்யை அம்பலப்படுத்திய நெட்டீசன்..

பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் ஆனபின்னர் ஒரே வருடத்தில் தமிழ்நாட்டில் கடன் 2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது என ஆர்எஸ்எஸ் மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவின் குற்றச்சாட்டு பொய் என சமூகவலைதளத்தில் ஒருவர்  தகுந்த ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

 

SG Surya accused Minister PTR of borrowing Rs 2 lakh crore in one year. but that is fals proved my netisan
Author
Chennai, First Published Aug 18, 2022, 4:20 PM IST

பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் ஆனபின்னர் ஒரே வருடத்தில் தமிழ்நாட்டில் கடன் 2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது என ஆர்எஸ்எஸ் மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவின் குற்றச்சாட்டு பொய் என சமூகவலைதளத்தில் ஒருவர்  தகுந்த ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-22க்கான இடைக்கால பட்ஜெட்டில்  85 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை வைத்துவிட்டு சென்றுள்ளார் என்றும், ஆனால் அந்த தொகையை திமுகவின் கணக்கில் ஏற்ற  பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்பதையும் அந்த நபர் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையல் பலரும் எஸ்.ஜி சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

SG Surya accused Minister PTR of borrowing Rs 2 lakh crore in one year. but that is fals proved my netisan

பத்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்து முழு பட்ஜெட்டை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.  இது ஒருபுறம் உள்ள நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் தமிழகத்தின் நிதி நிலைமைகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 13 மடங்காக உயர்ந்துள்ளது என்றும், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 16 லட்சம் குடும்பங்களுக்கும் ஒவ்வொரு  குடும்பத்தின் தலையிலும் தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலி.! இபிஎஸ்யை அழைக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது..!ராஜன் செல்லப்பா ஆவேசம்

 

அதாவது 2016 ஆம் ஆண்டு  தொடங்கி அதிமுக ஆட்சியில் இருந்த 2021 வரையில் மாநிலத்தில் கடன் அளவு 4.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். 2010ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் கடன் அளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502.கோடியே 54 லட்சம் என அறிவிக்கப்பட்டதையும் அவர் சுட்டிகாட்டினார். இந்தக் கடன் தொகை 2021ம் ஆண்டு இறுதிக்குள் 5.70  கோடியாக உயரும் என்றும்  அந்த பட்ஜெட்டில் ஓபிஎஸ் கணித்திருந்த்தையும் அவர் சுட்டிக்காட்டினார் இந்த தகவல் இது எல்லோரும் அறிந்ததே.

SG Surya accused Minister PTR of borrowing Rs 2 lakh crore in one year. but that is fals proved my netisan

இந்நிலையில் தமிழ்நாடு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் தமிழ்நாட்டின் கடன் தொகை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராவதற்கு முன்னர் 4,85, 000  கோடிகள் இருந்தது, ஆனால் அவர் நிதியமைச்சர் ஆனதற்கு பிறகு தமிழகத்தின் கடன் 6,54,000  கோடியாக உயர்ந்துள்ளது, ஆகவே ஒரே வருடத்தில் சுமார் 2 லட்சம் கோடி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடன் வாங்கியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு நிதியமைச்சர் நிதியியல் விவேகம் குறித்து நாட்டிற்கு பாடம் எடுக்கிறார். ஒருவர் ஆங்கிலம் பேசத் தெரிந்தால் மட்டுமே அவர் அறிவாளியாகிவிட மாட்டார் என சூர்யா தெரிவித்துள்ளார்.

 

அவரின் இந்த கருத்து பல திமுகவினர்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் இந்த குற்றச்சாட்டிற்கு ட்விட்டர் பயனர் ஒருவர் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார், அதில், 2021-2022 ஆம் ஆண்டுக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலேயே 85 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை வைத்துள்ளார், அது அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறிப்பிலேயே இடம்பெற்றுள்ளது. ஆனால் அதிமுக காலத்திலிருந்த அந்த கடன் தொகையை நைசாக திமுக மீது ஏற்ற திருட்டு சங்கிகள் முயற்சிக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். அத்துடன் 2001-2002 ஆம் ஆண்டுக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிற்கான  நகலையும் ஆதாரமாக அவர் பதிவிட்டுள்ளார்.  

இதையும் படியுங்கள் : நீங்க தர்மயுத்தம் தொடங்கியதே சசிகலாவுக்கு எதிராக தான்.. ப்ளாஸ்பேக்கை சொல்லி ஓபிஎஸ்ஐ அலறவிடும் கே.பி.முனுசாமி.!

ஏற்கனவே பாஜகவினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக தொடர்ந்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள் என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், எஸ்.ஜி  சூர்யா ஒரே வருடத்தில் இரண்டு லட்சம் கோடி கடன் வாங்கிய பிடிஆர் என பழி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை டுவிட்டர் பயனர் ஆதாரத்துடன்  முறியடித்துள்ளார். இதை  திமுகவினர் மற்றுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios