தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவின் துணை தலைவராக அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநிலத்தின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்க மாநிலத் திட்டக்குழு தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அமைக்கப்பட்டது. இது முதல்வரை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதேபோன்று, ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஆண்டு திட்டங்கள் குறித்து திட்டக்குழு முக்கிய பங்காற்றி வருகிறது. அரசுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய அமைப்பான இந்த திட்டக் குழுவின் துணைத் தலைவர் பதவி வெகு நாட்களாக நிரப்பப்படாமல் இருந்துவந்தது.

இதையும் படிங்க;-  பிரேமலதா ஏமாற்றம்... பாஜக மிரட்டலுக்கு பணிந்து ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய எடப்பாடி..!


 
இந்நிலையில், மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன்..? ஓ.பி.எஸ்.க்கு நோட்டீஸ்.. சபாநாயகரின் அதிரடியால் தமிழக அரசியலில் பரபரப்பு.!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம், உணவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர், பன்னீர்செல்வம் தனி அணி தொடங்கியபோது ஆதரவளித்தவர்களில் கே.பி.முனுசாமியும், பொன்னையனும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.