Asianet News TamilAsianet News Tamil

அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன்..? ஓ.பி.எஸ்.க்கு நோட்டீஸ்.. சபாநாயகரின் அதிரடியால் தமிழக அரசியலில் பரபரப்பு.!

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

speaker dhanabal notice OPS including 11 MLAs
Author
Tamil Nadu, First Published Mar 9, 2020, 10:44 AM IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

speaker dhanabal notice OPS including 11 MLAs

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

speaker dhanabal notice OPS including 11 MLAs 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பாக உரிய விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், சபாநாயகரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios