நீங்கள் ஆர்ப்பரித்து வருகிற போது ஈரோடு என்ன ஆகப்போகிறதோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிற போது இங்கே பல கட்சியினர் தவெகவில் இணை இருக்கிறார்கள். அதுதான் நடக்கப் போகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெகவின் மாநாடு டிசம்பர் 16, தேதி ஈரோட்டில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தவெகவின் மாநில அளவிலான மாநாடுகளின் தொடர்ச்சியாக, மாவட்ட அளவிலான பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. டிசம்பர் 16-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவை-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பெருந்துறை அருகே சரளை பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முன்பு திமுக மாநாடு மற்றும் முதல்வர் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தவெகவின் இந்த பொதுக்கூட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும், இடத் தேர்வில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஈரோடு வேளாண்மை கல்லூரி பகுதியில் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதன் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பெருந்துறை பகுதியில் அதிமுக புதிதாக கட்டியுள்ள அலுவலகம் உள்ளதால், அது கிடைக்காமல் போயுள்ளது. இதனால் தவெகவினர் சரளை பகுதியை மாற்று இடமாக பரிசீலித்து, அங்கு பார்வையிட்டுள்ளனர். போலீஸ் அனுமதி மற்றும் கார்பார்க்கிங் ஏற்பாடுகள் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி அவரது பகுதியில் நடைபெறும் மாநாடு என்பதால் முந்தைய மாநாடுகளைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தவெகவின் தமிழக அரசியலில் புதிய அலை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் முன் பேசிய செங்கோட்டையன், ‘‘இந்தப்பயணம் வெற்றிப்பயணம் மட்டும் அல்ல, ஒரு வரலாறு படைக்கின்ற பயணமாக அமையும். நீங்கள் கவலைப்படக்கூடிய தேவையில்லை. நீங்கள் பார்த்திருக்கக்கூடும் பாண்டிச்சேரியே குலுங்கிப்போய் விட்டது. தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னவாகும்? எல்லோரும் கேட்டார்கள். இந்த இடத்திலே பல கண்டிஷன். 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்று சொன்னால் 84 கட்டுப்பாடுகள். இதுவரையும் இந்திய வரலாற்றில் ஏன் உலக வரலாற்றில் 84 கட்டுப்பாடுகள் விதித்ததாக எங்கும் இல்லை. ஆகையால் இரண்டு நாட்கள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

நீங்கள் ஆர்ப்பரித்து வருகிற போது ஈரோடு என்ன ஆகப்போகிறதோ என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறபோது இங்கே பல கட்சியினர் தவெகவில் இணைய இருக்கிறார்கள். அதுதான் நடக்கப் போகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதல்ல. எங்களோடு யார் வருகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். மறந்து விடக்கூடாது, லட்சிய பயணம் வெற்றி பெற வேண்டும். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரே சக்தியாக, தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் அமருவார் என்று வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்’’ என சபதம் விடுத்துள்ளார்.

