இபிஎஸ் புதிய கார் வாங்கியது ஏன்.? எந்தெந்த கூட்டணி கட்சியை காரில் ஏற்றிக்கொள்வோம் - செல்லூர் ராஜூ அதிரடி பதில்

நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பாவம் எதோ ஒரு துறை கொடுத்துட்டாங்கள், அவர ரொம்ப நாளா காணோம். தற்போது திமுக கூட்டங்களில் கூட பிடிஆரின் படங்களை கூட போடுவதில்லையென செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Sellur Raju criticized that no projects were completed in Madurai during the DMK regime

மதுரையில் திட்டங்கள் நிறைவேறவில்லை

மதுரை மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வார்டு பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் மன்னர் கால அகல்விளக்குகள் போல உள்ளது.  ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை அதிகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இப்போது அதிமுக உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லையென கூறியவர், உட்கார இருக்கை வழங்கவில்லையென விமர்சித்தார்.  

Sellur Raju criticized that no projects were completed in Madurai during the DMK regime

பிடிஆர் படத்தை கூட போஸ்டரில் காணவில்லை

மதிமுக எம்.எல்.ஏ, துணை மேயரும் மாநகராட்சியை கண்டித்து பதவி விலகி போகிறேன் என்று பேசும் அளவிற்கு மாநகராட்சி செயல்பாடு உள்ளதாக கூறிய அவர், இது தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல்தியாகராஜனை பாவம் எதோ ஒரு துறை கொடுத்துட்டாங்கள் அவர காணோம். தற்போது திமுக கூட்டங்களில் கூட அமைச்சர் பிடிஆரின் படங்களை கூட போடவில்லை,  வணிகவரித்துறை அமைச்சர் தான் தற்போது பவர்புல்லாக இருக்கிறார். மதுரையில் இரு அமைச்சர்கள் இருந்தும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். 

Sellur Raju criticized that no projects were completed in Madurai during the DMK regime

எடப்பாடி புதிய கார் வாங்கியது ஏன்.?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய கார் வாங்கியுள்ளார். அந்த காரில் பிரிந்து சென்றவர்கள், எந்த தெந்த கூட்டணி கட்சியினரை ஏற்றிக்கொள்வீர்கள் என் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வெற்றியை பயணத்தை நோக்கி செல்வதற்காகத்தான் கார் வாங்கப்பட்டுள்ளது. விரைவாக செல்ல வேண்டும், விரைவாக மக்களை சந்திக்கனும் என்பதற்காகத்தான் வாங்கியிருக்கோம். எடப்பாடி பழனிசாமி வல்லவனுக்கு வல்லவன், எதை செய்தால் கட்சிக்கு நல்லது என அவருக்கு தெரியும்,  இப்போது கூட்டணிக்கான நேரம் இல்லை. தேர்தல் நேரத்தில் சீட் ஒதுக்கும் போது தான் தெரியும். பாஜகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எது கட்சிக்கு, தமிழக மக்களுக்கு நல்லதோ அந்த முடிவை எடப்பாடி எடுப்பார் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தலைமறைவா.? ஜாமின் நிபந்தனை மனு தள்ளுபடி -அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios