யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக கூறியுள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான் என்றார்.

 

ஆடை என்பது அவர்களின் தனி மனித உரிமை. முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போடுபவர்கள் ஒரு மனநோயாளிகள். முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார். அது ஒரு குளிர் பகுதி. அதற்கேற்ப உடை அணிந்துள்ளார். ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதலமைச்சர். அவர் கோட் சூட் அணிவதை எப்படி இழிவாக பார்க்க முடியும். 

இதையும் படிங்க;- சசிகலாவின் ரைட்டுக்கு பதவியை தூக்கி கொடுத்த ஸ்டாலின்... அதிர்ச்சியில் டிடிவி குரூப்..!

பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் எங்களுக்கு பெருமையாக இருந்தது என்றார். யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன், மேலும், சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார் என்று சீமான் கூறினார்.