அதிமுகவில் எம்.எல்.ஏ.வாகவும் மாவட்ட செயலாளராகவும் பதவிவகித்த முன்னாள் அமமுக பிரபலம் வி.பி. கலைராஜனுக்கு திமுகவில் மிகப்பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கட்சியில் இணைந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இது கரூர் மாவட்டத்தின் கட்சியினர் மட்டுமன்றி ஒட்டுமொத்த திமுகவினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில்தான் அடுத்தடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விஐபிகள் திமுக அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வந்தனர். 

அந்தவகையில் அடுத்த விக்கெட்டாக வந்தவர்தான் வி.பி. கலைராஜன் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த இவர் சசிகலாவின் தூரத்து உறவினரும் ஆவார். சசிகலாவால் அடையாளம் காணப்பட்டு தியாகராயநகர் எம்.எல்.ஏ.வாக தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் அதிமுகவில் மாநில அளவில் பொறுப்பு வகித்தவர் ஆவார். சசிகலாவின் முழு நம்பிக்கைக்குரியவர் ஆன கலைராஜன் டி.டி.வி. தினகரனுடன் எப்போதுமே ஒத்த கருத்தோடு இருந்ததில்லை இருந்தாலும் சசிகலாவின் உத்தரவின் பேரில் அவர் டிடிவியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அவரோடு சேர்ந்து பயணித்தார். ஏதோ கடமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றிய வி.பி. கலைராஜன் ஒருகட்டத்தில் டிடிவி மீது மிகுந்த கடுப்பாகி செந்தில்பாலாஜி துணையோடு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்பாக திமுகவில் இணைந்தார். 

இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் அப்போது டிடிவி.தினகரன் கிண்டலடித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தின் மிக முக்கிய பிரபலமான தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். இணைந்து பல மாதங்களாகியும் இவர்கள் இருவருக்கும் திமுகவில் அங்கீகாரம் கிடைக்காத நிலையே காணப்பட்டது சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற பொறுப்பு குழுவைச் சேர்ந்த தலைவர் துரைமுருகன் தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் தேனி மாவட்டத்தில் வைகை அணை பகுதியில் பார்வையிட்டனர். அப்போது ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தையும் துரைமுருகன் சந்திக்க நேரிட்டது. 

துரைமுருகன ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் டி.ஆர். பாலுவின் மகன் டிஆர்பி பாலு சமீபத்தில் கட்சியில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே அறையில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தங்க தமிழ்ச்செல்வன் ஓ.பி. ரவீந்திரநாத் நேருக்கு நேர் சந்தித்த போது சங்கடத்தில் நெளிந்த தாக சொல்லப்படுகிறது அந்த சந்திப்பு முடிந்த பிறகு உடனடியாக தனது ஆதங்கத்தை துரைமுருகனிடம் தெரிவித்தாராம் தங்கதமிழ்ச்செல்வன் அதாவது நீங்கள் எல்லாம் பொறுப்பில் இருக்கீங்க நான் கட்சி பதவியிலும் இல்லை அரசு பொறுப்பில் இல்லை எனக்கு எவ்வளவு சங்கடமா இருந்தது தெரியுமா அந்த தம்பிய நேருக்கு நேர் சந்திக்கும் போது அப்படின்னு சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.

 

இந்த மனவருத்தத்தை துரைமுருகன் ஸ்டாலினிடம் அப்படியே தெரிவித்தாராம். மேலும் இவர்களை காபந்து செய்யாவிட்டால் நிச்சயம் கட்சியை விட்டு வெளியே செல்வதற்கும் வாய்ப்புள்ளதாகவும் துரைமுருகன் எச்சரிக்கை கொடுத்தாராம் இதனை அடுத்து தான் ஸ்டாலின் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தார் அதன் அடிப்படையில்தான் தற்போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கைபரப்பு செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியை வாரி வழங்கினார் ஆம். 

இதற்கு முன்பு இந்த பதவியை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ ராசா வகித்து வந்தார் அந்த பதவியை தான் தற்போது தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின் அதேபோன்றுதான் மிக முக்கியமான பதவியான இலக்கிய அணி செயலாளர் பதவியும் கலை  ராஜனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதனால் கலை ராஜனுக்கும் தங்கதமிழ் செல்வனுக்கும் கட்சித் தலைமையிடம் தலைமையிடம் இருந்த வருத்தம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.