Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு நடத்திய மத்திய அரசு.! தைப்பூச தினத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடத்துவதா? சீமான்

தமிழ்நாட்டில் தைப்பூசம் திருவிழாவில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்வதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்றவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Seeman has objected to holding a special Aadhaar linking camp on Thaipusam day
Author
First Published Feb 5, 2023, 7:45 AM IST

ஆதார் சிறப்பு முகாம்

தமிழகத்தில் தைபூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமை வேறொரு தினத்தில் மாற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ம க ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

Seeman has objected to holding a special Aadhaar linking camp on Thaipusam day

தைப்பூச திருவிழா

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழா தமிழ்நாட்டில் நாளை (05.02.23) நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் நாளைய சிறப்பு முகாமில் கலந்துகொள்ள முடியாத நிலையே உள்ளது. ஏற்கனவே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் திருவிழாவாம் தைப்பொங்கல் நாளன்று வங்கித் தேர்வினை வைத்து தமிழ் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடியான சூழலை உருவாக்கியது இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI).

Seeman has objected to holding a special Aadhaar linking camp on Thaipusam day

தற்போது, தேர்தல் ஆணையமும் அதுபோன்று ஒரு சூழலை அளித்து நெருக்கடி அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, நாளை நடைபெறவுள்ள சிறப்பு முகாமை வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கள ஆய்வில் முதல்வர் கேட்ட கேள்விகள்.. 24 மணி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள் - அதிரவைக்கும் பின்னணி

Follow Us:
Download App:
  • android
  • ios