கள ஆய்வில் முதல்வர் கேட்ட கேள்விகள்.. 24 மணி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள் - அதிரவைக்கும் பின்னணி
முதல்வர் ஸ்டாலின் கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கள ஆய்வு என்ற பெயரில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதில் தலைமைச் செயலாளர், தனது தனிச் செயலாளர்கள், உள்ளிட்டோரையும் இந்தச் சந்திப்பின் போது உடன் வைத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
ஏற்கனவே சொன்னது போல, இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்கள். அதை போலவே பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட அதிகாரிகள் முதல்வர் என்ன கேள்வி கேட்கப்போகிறாரோ என்ற பயம் அனைத்து அதிகாரிகளிடமும் இருந்தது. அரசு அறிவித்த திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என முக்கியமான திட்டங்களின் பெயர்களை சொல்லி முதல்வர் கேள்வி கேட்க அனைவரும் ஆடிப்போயினர். குறிப்பாக அரசு அதிகாரிகள் பயந்து விட்டனர் என்றே கூறுகிறார்கள்.
இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?
மேலும், ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற குற்றங்களை பட்டியலியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஏன் இத்தனை குற்றங்கள் நடந்துள்ளது ? இந்த குற்றங்களை குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஏன் குற்றங்கள் குறையவில்லை ? இதற்கு முக்கிய காரணம் என்ன ? என வரிசையாக கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதனை சற்றும் எதிர்பாராத மாவட்ட எஸ்.பி மற்றும் அரசு அதிகாரிகள் அதிர்ந்தே போய் விட்டனர்.
முதல்வர் ஸ்டாலின், ஆய்வை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது ஆட்சியர்களையும் எஸ்.பிக்களையும் உடனடியாக மாற்றும்படி தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருப்பத்தூர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக மாற்றப்பட்டிருக்கிறார். சமூக நலத்துறை பாதுகாப்பு இயக்குநராக இருந்த வளர்மதி ராணிப்பேட்டையின் புதிய ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கை இனியும் தொடரும் என்று கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!