Asianet News TamilAsianet News Tamil

உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணாலும் பேசுவ.. எச்.ராஜாவை டரியில் ஆக்கிய சீமான்.

உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணாலும் பேசுவ,  நாங்க அப்படியா என எச். ராஜாவை சீமான் கலாய்த்துள்ளார். மேலும், சோழர்களை இந்து என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது, அது கேவலமாக உள்ளது என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.


 

Seeman, convener of the Namthamilar party, criticized BJP leader H. Raja as crazy
Author
First Published Oct 3, 2022, 12:38 PM IST

உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணாலும் பேசுவ,  நாங்க அப்படியா என எச். ராஜாவை சீமான் கலாய்த்துள்ளார். மேலும், சோழர்களை இந்து என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது, அது கேவலமாக உள்ளது என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்  படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களால் சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படும் மாபொசிஅவர்களின் புகழை போற்றுகிற நாள் இது. 

Seeman, convener of the Namthamilar party, criticized BJP leader H. Raja as crazy

மா பொ சி அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும், தாம்பரம் அருகே ஊரப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கும் மாபொசியின் பெயர் வைக்கவேண்டும். தமிழக அரசும் மாபொசி பெயரால் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரெல்லாம் இந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான் என பாடபுத்தகத்தில் இருப்பதைக் கேட்கும் போது எனக்கு கோபம் வருகிறது, ஆனால் நிச்சயம் ஒரு காலம் வரும் அதை நாங்கள் எரிப்போம் என்றார்.

இதையும் படியுங்கள்: காந்தியை கொன்றவர்களுக்கு எதிராகத்தான் இந்த யாத்திரை.. கொட்டும் மழையில் கர்ஜித்த ராகுல் காந்தி.. மாஸ் பேச்சு.

அப்போது எச்.ராஜா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, " உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணா பேசுவ, நாங்கள் அப்படியா " என எச். ராஜாவை கேட்கத் தோன்றுகிறது என்றும் சீமான் பதிலளித்துள்ளார். ஒரு சமூகத்திடமிருந்து திரைத்துறையை பொதுமைப்படுத்தியது திராவிட இயக்கங்கள் தான் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் அதை மாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என சீமான் கூறினார்.

Seeman, convener of the Namthamilar party, criticized BJP leader H. Raja as crazy

தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியும்தான் திராவிட மக்களாட்சி என்று கூறுகிறார் நிலத்தைச் சுரண்டுவது மக்களை பிரித்து வைப்பது, பல கோடி ஊழல் செய்வது, இதுதான் திராவிட மாடலாம். தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டே அனைத்தையும் அழிக்கிறார்கள் என்றார். 

இதையும் படியுங்கள்:  RSS, இந்து அமைப்புகளின் தலைவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்.. உளவுத்துறை அலர்ட்.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.

பெரியாரை எதிர்ப்பது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெரியாரை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் பெரியார் தான் தமிழ் தேசியத்தின் தலைவர் என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, ஆனால் பெரியார் தான் பெண்ணுரிமைக்கு போராடினார் என்று சொல்வதை எதிர்க்கிறோம், பெரியாரும் போராடினார் என்பதை ஏற்கிறோம், பெரியாருக்கு முன்பே எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் போராடியிருக்கிறார்கள். பராசக்தி படம் ஒரு புரட்சியை செய்தது அதில் கலைஞர் வசனம் இயற்றிய விதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios