RSS, இந்து அமைப்புகளின் தலைவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்.. உளவுத்துறை அலர்ட்.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பி எஃப் ஐ அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குதல் மற்றும் தீவிரவாத பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் போன்ற செயல்களுக்கு அவர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
அதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் அலுவலங்கள் மற்றும் தலைவர்களின் இல்லங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: ஆபாச பேச்சு, இடுப்பில் கிள்ளி பாலியல் தொல்லை.. இளம்பெண்ணை ஒரு நைட்டுக்கு கூப்பிட்ட ஓனர் கைது..!
அதைத்தொடர்ந்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் அதில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு ஐஎஸ் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்பில் இருப்பதாக கூறி மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த 28 ஆம் தேதி தடைசெய்தது.
இதையும் படியுங்கள்: 9 ஆண்டுக்கு பிறகு பழிக்கு பழி.. சென்னையில் கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர வைக்கும் தகவல்.!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இந்து அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஒய் பிரிவு அதாவது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் 4 பேருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்து முன்னணி உள்ளிட்ட தீவிரமான இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வெளியே செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களது வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களை தீவிரவாதி கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை தசரா உள்ளிட்ட விழாக்கள் நடைபெற உள்ள நிலையில் இந்து அமைப்பின் தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.