காந்தியை கொன்றவர்களுக்கு எதிராகத்தான் இந்த யாத்திரை.. கொட்டும் மழையில் கர்ஜித்த ராகுல் காந்தி.. மாஸ் பேச்சு.

ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் கொட்டும் மழையில் தொண்டர்கள் இடையே  உரையாற்றியது அவர்களது கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

This yatra is against those who killed Gandhi.. Rahul Gandhi roared in the pouring rain.. Mass speech.

ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் கொட்டும் மழையில் தொண்டர்கள் இடையே  உரையாற்றியது அவர்களது கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ராகுலின் இந்த உத்வேகத்தை பாராட்டி வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்தே அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3400 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 மாநிலங்களை கடந்து செல்லம் தேசிய ஒற்றுமை பேரணி ஜோடோ யாத்ரா தொடங்கியுள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது இந்த நடையாத்திரை தற்போது கர்நாடக மாநிலம் மைசூரை அடைந்துள்ளது.

This yatra is against those who killed Gandhi.. Rahul Gandhi roared in the pouring rain.. Mass speech.

இதையும் படியுங்கள்:   gujarat opinion poll: குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த யாத்திரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் நேற்று  ராகுல்  தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடுமையான மழை கொட்டி தீர்த்தது. மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ராகுல் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இடி, மின்னல், மழையால் ஒருபோது இந்த யாத்திரை  நின்று விடாது. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்தவர்களுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம்,

இதையும் படியுங்கள்: rahul: bharat jodo yatra: பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு

அந்த சித்தாந்தத்துக்கு எதிராகத்தான் இந்த போராட்டம்,  நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை ஈன்று பெற்று தந்த சுதந்திரம் கடந்த 8 ஆண்டுகளாக பறிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி எப்படி பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடினாரோ அது போலத்தான் நாமும் இந்த ஆட்சியை எதிர்த்து போராடுகிறோம், இந்த சித்தாந்தத்தால் கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டிரல் சமத்துவம் இல்லை, பிரிவினை அதிகரித்துவிட்டது இவ்வாறு அவர் பேசினார்.

This yatra is against those who killed Gandhi.. Rahul Gandhi roared in the pouring rain.. Mass speech.

ராகுல் மழையில் நனைந்தபடியே உரை நிகழ்த்தியதை பலரும் பாராட்டி வருகின்றனர். ராகுல் நாட்டுக்கு நம்பிக்கையளிக்கும் தலைவர் என்றும் பலர் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ராகுலின் நேற்றைய உரையே மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் 2019 இடைத்தேர்தலில் தான் மழையில் நனைந்தபடி பேசியதே ஒப்பிட்டு பகிர்ந்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios