“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியல் விமர்சகரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில், நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சவுக்கு சங்கர் பதில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !
அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர், நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நீதித்துறையின் மதிப்பை குறைத்தோ, களங்கப்படுத்துவதோ எனக்கு நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு" என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைத்த நீதிபதிகள், பின்னர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் நள்ளிரவு நேரத்தில் திடீரென மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். திடீரென்று ஏன் மாற்றப்பட்டார் என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
நிர்வாக காரணங்கள் மற்றும் சவுக்கு சங்கர் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.அதன்படி, மதுரை சிறையில் அவர் இருந்தால், அதுகுறித்து மேலும் விசாரிப்பார். அது தங்கள் துறைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவரை கடலுாருக்கு இடம் மாற்றியுள்ளனர் என தெரியவந்தது.
சவுக்கு சங்கருக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடனேயே, கடலுார் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய வேலையை, சிறை நிர்வாகம் செய்ய ஆரம்பித்துவிட்டது என்றும், மதுரை சிறையில் கைதிகள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான 1, 200க்கு பதில், 1, 850 பேர் உள்ளனர். இதனால், உள்ளே பல்வேறு நெருக்கடிகளை சிறை நிர்வாகம் சந்தித்து வருகிறது என்றும் பல தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..“ஆத்திசூடி கேட்டா, சினிமா பாட்டை பாடுறான்..முருகனுக்கு தமிழ் மந்திரமே வேண்டாம்னு சொல்றாங்க” சீமான் அதிரடி.!