EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !

கடந்த சில மாதங்களாகவே தொடரும் அதிமுக உட்கட்சி குழப்பம் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து மாறி மாறி சாடி வருகிறது.

Aiadmk former ministers shocking speech about edappadi palaisamy as a secretary

மேலும், கட்சி தொடர்பாகவும் தலைமை அலுவலகம் தொடர்பாகவும் கூட இரு தரப்பும் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இது தான் அதிமுகவின் தற்போதைய நிலை.அதிமுக இரட்டை தலைமையின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதையடுத்து ஒற்றை தலைமை என்ற பேச்சு அங்கு எழுந்தது.

அதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Aiadmk former ministers shocking speech about edappadi palaisamy as a secretary

எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிமுகவின் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்றும், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் கொஞ்சம் பேர் தான் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் கு.ப கிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

அப்போது பேசிய அவர்கள், ‘சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் அறிவித்தபோது இவருடைய பாட்டனார் சொல்லியதை மீண்டும் நினைவுபடுத்தும் அவல நிலைக்கு வந்துள்ளேன். பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார் கையேந்த வைத்துள்ளார், இந்தத் திட்டத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் இந்த திட்டம் எப்படி செயல்படுத்த முடியும் என அப்போது முதல்வர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை நடத்துவேன் என்று அன்று சூலுரைத்தார்கள். ஓராண்டு காலம் சிறப்பான முறையில் திட்டத்தை செயல்படுத்தி உலக நாடுகள் பாராட்டி இந்த திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்தார்கள் என்பதை யாரும் மறக்க வேண்டாம். சத்துணவு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தான் இவர்கள் காலத்தில் சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்கினார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த அளவில் ஓ பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தான் தற்பொழுது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளை நாங்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகிறோம். மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நான் கருதுகிறேன்.

வைத்தியலிங்கம் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு இயல்பான ஒரு சந்திப்பு ஆகும். ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள் அந்தப் பணிகளை தான் தற்பொழுது அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் விரைவில் எங்கள் அலுவலகம் எங்கள் கைக்கு வந்து விடும் அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும்.

மேலும் செய்திகளுக்கு..மதுரைக்கு டைடல் பார்க் தேவையில்லை.. முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சொன்ன புது காரணம்.!!

 

பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்ட விதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது ஆகையால் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதும் செல்லாது அப்படி ஒன்று கிடையவே கிடையாது.

எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த பதவியோடு நடத்துவோம். அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சட்ட விதிகளை உருவாக்கி வழங்கி உள்ளார் அதன்படியே நாங்கள் பயணிப்போம்.

எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் ஆனால் அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் என்றார்.

அதிமுகவின் சட்ட விதிகளை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் ஆனால் நினைக்கவில்லை ஆனால் அவரும் வருவார். எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் இபிஸ் அவருடைய வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லட்டும் பின்னர் மீண்டும் திரும்பி வருவார்’ என்று கூறினார்கள்.

மேலும் செய்திகளுக்கு..காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios