காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.
மே மாதத்தில் தொடங்கிய பிரச்னை, இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கைகள் மாறிமாறி வலுப்பெற்றாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளே கட்சிக்குள் ஓங்கியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் என்று பல்வேறு மாவட்டங்களுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்து உள்ளது. இதனை கண்டித்து அதிமுக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ‘பல வருடங்களுக்கு முன்னாடியே கலைஞருக்கு அண்ணணாகவும் ஸ்டாலினுக்கு பெரியப்பாவாகவும் இருந்த எம்.ஜி.ஆர் மக்களுக்கான சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா குழந்தையை பெற்று என்னிடம் கொடுங்கள். அதை நான் வளர்கிறேன் என சொன்னார்.
மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !
திமுக, அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு காலை உணவு என்ற புதிய திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தது போல் நடிக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் முதல்வரின் அப்பா பெரியப்பா எம்ஜிஆர் கொண்டு வந்தது. காலை உணவு திட்டத்தை ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்துவிட்டார் என்று உளறிவிட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !