“ஆத்திசூடி கேட்டா, சினிமா பாட்டை பாடுறான்..முருகனுக்கு தமிழ் மந்திரமே வேண்டாம்னு சொல்றாங்க” சீமான் அதிரடி.!
திருமால் கூட 2 அடி, நம் பாட்டன் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடி. திருவள்ளுவனுக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனை பார்க்கணும். இன்று தமிழ் பலருக்கும் தெரியவில்லை.
நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் சீமான்.
அப்போது பேசிய அவர், ‘சங்க தமிழிசை விழா நடத்துவதற்கு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றி.இங்கிருந்த அனைவரையும் இசை மழையால் நனைய வைத்தார். எனக்கு அப்பவே தெரியும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை அடுத்து நாம நடத்துறோம். 50 ஆயிரம் பேர் இல்லை, 1 லட்சம் பேர் வரைக்கும் சேர்த்து மாநாடு திறந்த வெளியில் நடத்தப்போறோம்.
மேலும் செய்திகளுக்கு..“திறனற்ற திமுக அரசே.! விடியல் தரல, விலையேற்றத்தை மட்டும் தான் தந்து இருக்காங்க” - அண்ணாமலை அதிரடி !
மழை வராமல் இருந்தா சரி' என்று கூற அரங்கில் கைதட்டல்கள் பறந்தது. மேலும் பேசிய அவர், 'பாரதியார், கம்பன், இளங்கோவடிகளை பார்த்து எனக்கு ஆச்சர்யமில்லை. இவங்களுக்கு எல்லாம் தமிழ் மொழியை சந்தத்தோடு, இசையோடு எழுதி அவர்களுக்கே தமிழ் சொல்லி கொடுத்த தமிழரை நினைத்து பார்க்கணும்.
திருமால் கூட 2 அடி, நம் பாட்டன் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடி. திருவள்ளுவனுக்கு தமிழ் சொல்லி கொடுத்தவனை பார்க்கணும். இன்று தமிழ் பலருக்கும் தெரியவில்லை. ஒரு எழுத்தை வைத்து எழுத தெரிந்தவன் தமிழன். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய பாய்ச்சலை கொண்டு வந்தவன் பாரதி.முருகன் அவ்வையாரை ஒன்று, இரண்டு என பாட்டு பாட சொல்லி கேட்க, ஒன்றானவன், இரண்டானவன் என பாட்டு பாட ஆரம்பித்தாள் அவ்வை.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
இப்போது அந்த முருகனுக்கே தமிழில் மந்திரம் சொன்னா புரியாது அப்படின்னு சொல்றாங்க' என்று சீமான் கூற, அரங்கில் கரவொலி பறந்தது. அரசியல் இங்க பேசக்கூடாது.அப்படி பேசுனா மறுபடியும் இங்க அனுமதி தரமாட்டாங்க. தமிழில் பிரச்னை ஏற்பட்டால், நீதான் வரணும் என்று சிவனை கேட்டவன் பான பத்திரன். ஓருயிர் முதல் எல்லா உயிருக்கும் பொதுவானது இசை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய முதல் குடி தமிழ் குடி.
ஒரு மாணவரிடம் ஆத்திசூடி தெரியுமா என்று கேட்க, அந்த மாணவன் ஆத்திசூடி, ஆத்திசூடி என்ற பாடலை பாடுகிறான். அதை கேட்டு நாம் காதை பொத்திட்டு போகணும். இப்படி தலைமுறையை விடக்கூடாது. பழம்பெருமையை நாம் பேச வேண்டும்.' என்று வரிசையாக தமிழ் மொழியின் சிறப்புகளை பேசினார் சீமான்.
மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !