Breaking News : சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைத்தார் சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என நடிகர் சரத்குமார் அறிவித்திருந்த நிலையில், தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைப்பதாக அறிவித்துள்ளார்.

Sarathkumar merged Samadtva Makkal Party with BJP KAK

பாஜகவில் இணைந்தது அஇசமக

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள்  தொகுதி பங்கீடு மற்றும், கூட்டணி தொடர்பாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பாஜக தங்கள் கூட்டணியை பலப்படுத்து ஒவ்வொரு கட்சியுடம் பேசி வருகிறது. இந்தநிலையில தங்கள் அணியில் அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியை கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு நெல்லை அல்லது தூத்துக்குடி தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.

Sarathkumar merged Samadtva Makkal Party with BJP KAK

இரவில் மனதை பாதித்தது

இது தொடர்பான இணைப்பு விழா அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உறுப்பினர்களும் மற்ற கட்சியை சேர்ந்தவர்களும் எத்தனை தொகுதி யாருடன் கூட்டணி? என கேள்வி எழுப்புவார்கள்? இது மனதை பாதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் பொழுது எத்தனை சீட் என்ன கோரிக்கை என்று சென்று கொண்டிருக்கிறது என்று குழப்பம் இருந்தது. நம்முடைய வலிமை எல்லாம் மோடிஜிக்கு கொடுத்து வலிமையோடு செயல்பட்டால் என்ன என என் மனதில் தோன்றியது.

Sarathkumar merged Samadtva Makkal Party with BJP KAK

துணையாக இருப்பதாக ராதிகா கூறினார்.

இது தொடர்பாக எனது மனைவியிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் துணையாக இருப்பேன் என தெரிவித்தார். எனது கருத்தை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தலைவன் எவ்வழியோ அவ்வழியே நாங்கள் என அவர்களும் தெரிவித்து விட்டார்கள். பாஜகவுடன் தான் தேர்தலை சந்திக்க உள்ளோம் எனக் கூறிய நாங்கள் தற்போது பெருமையுடன் சொல்கிறேன் பாஜகவுடன் எங்கள் கட்சியை இணைத்துக் கொள்கிறோம் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக கூட்டணியில் சிபிஎம். சிபிஐ போட்டியிடும் தொகுதிகள் எது.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios