திமுக கூட்டணியில் சிபிஎம். சிபிஐ போட்டியிடும் தொகுதிகள் எது.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது எந்த, எந்த தொகுதி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The constituencies where CPM and CPI will contest in the DMK alliance have been announced KAK

தொகுதி பங்கீடு தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்டவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை பிரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் வழங்கியுள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திமுகவானது இந்த முறை 22 தொகுதியில் நேரடியாக போட்டியிடவுள்ளது.

The constituencies where CPM and CPI will contest in the DMK alliance have been announced KAK

இந்தநிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த முறை கோவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார்.அப்போது தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு ஏற்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது. 

இதையும் படியுங்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios