"லயோலா எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் பேர்வழிகளே.. ராஜராஜன் இந்து இல்லையா".? கொதிக்கும் ராமரவிக்குமார்.
தமிழனாக பிறந்தவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றால் கிறிஸ்தவன். தமிழனாக பிறந்தவன் அல்லாவை ஏற்றால் இஸ்லாமியன், தமிழனாக பிறந்தவன் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணாபத்யம் போன்ற வழிபாடுகளை ஏற்று இந்து என்று சொன்னால் நாங்கள் இந்து இல்லை என்று வாதிடும் லயோலாவின் எலும்பு துண்டுக்கு
தமிழனாக பிறந்தவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றால் கிறிஸ்தவன். தமிழனாக பிறந்தவன் அல்லாவை ஏற்றால் இஸ்லாமியன், தமிழனாக பிறந்தவன் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணாபத்யம் போன்ற வழிபாடுகளை ஏற்று இந்து என்று சொன்னால் நாங்கள்
இந்து இல்லை என்று வாதிடும் லயோலாவின் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் பேர்வழிகளே என இந்து தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விவரம் பின்வருமாறு:-
கிறிஸ்தவத்தில் ஆர்.சி, பெந்தேகொஸ்தே, CSI ..... இப்படி பல பிரிவு இருக்கிறது. நாங்கள் கிறிஸ்தவர்கள். இல்லை என்று சொல்ல துணிவு உண்டா? இஸ்லாத்திலும் ஷியா, சுன்னி,...... என பல உட்பிரிவுகள் உண்டுதானே நாங்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று உடைப்புவாதம் பேச
துணிவு இருக்கிறதா? ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த குடிபெருமைகளை, சமூக அடையாளங்களை மாற்றி பெயர் மட்டும் போடவேண்டும், சாதி இழிவு வேண்டாம் என்று திராவிட மாடல் பேசும் திருவாளர்களே! அனைத்து சாதியினரும் ஒன்றாக தான் இருந்தார்கள்.
இதையும் படியுங்கள்: அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. எடப்பாடியை ஜர்க் ஆக்கிய வைத்தியலிங்கம்.
சாதிகளுக்குள் பகை உணர்ச்சி தூண்டி, கலவரத்தை உருவாக்கி, பதவிக்காக பகை உணர்ச்சி தூண்டி மண்டை ஓடுகள் மீது மகுடம் தரித்தது தான் திராவிட மாடல்! நீர் மேலாண்மை செய்து, ஏரிகளை பாதுகாத்தது ராஜராஜ சோழன் மாடல்! பாதுகாத்த ஏரிகளை மூடி பிளாட்டு போட்டு ஏரியா - Area ஆக்கியது திராவிட மாடல்! ஆலயங்களில் பூசை செய்யும் ஆதி சைவ சிவாச்சார்ய மரபுகளுக்கும், பண்டாரங்கள், நாதஸ்வரம் வாசிப்போர், திருமுறை ஓதும் ஓதுவார் போன்ற பலருக்கும் நிலங்கள் கொடுத்து, நிவந்தங்கள் தந்தது ராஜராஜசோழன் மாடல்!
இதையும் படியுங்கள்: பின்தங்கியுள்ள தென்மாவட்டங்ளின் வளர்ச்சிக்கு அரசுக்கு நடவடிக்கை எடுக்கமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
இவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அரசாங்கம் பறித்துக் கொண்டது திராவிட மாடல்! ஆயிரக்கணக்கான கோயில்களை கட்டியது ராஜராஜ சோழன் மாடல்! கட்டிய கோயில்கள் சிதிலமடைந்தும், பராமரிக்காமல் பெருமை பேசுவது திராவிட மாடல்! பூசைமரபினரையும்,
திருமுறைகளையும் பாதுகாத்தது ராஜராஜ சோழன் மாடல்! பூசை மரபினரை ஆலயத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அந்நிய மதத் திட்டத்தை ஆலயங்களில் நுழைத்து மொழி அரசியல் களமாக இந்து ஆலயங்களை மாற்றுவது திராவிடம் மாடல்! நாட்டு கோயில் கட்டி வழிபாடு செய்வது இந்து தமிழன் மாடல்! தெய்வப்புலவர் வள்ளுவனை கிறிஸ்தவன் என்று ஆக்க முயற்சிப்பது திருச்சபைமாடல் திராவிட மாடல்!!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கட்டியது இந்து தமிழர் மாடல்!! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை கைப்பற்றி சாந்தோம் சர்ச் என்று மாற்றியது திருச்சபை மாடல்! திராவிட மாடல்!! ராஜராஜ சோழன் நினைவிடம் உள்ள கும்பகோணம் உடையாளூரில் மிகப்பெரிய நினைவு திருக்கோயில் பள்ளிப்படை கட்டி, பெருமைப்படுத்த வேண்டும் என்பது இந்து தமிழன் மாடல்! மறைந்த முதல்வர் கருணாநிதி பேனாவுக்கு
80 கோடியில் 134 அடியில் சிலை நிறுவசெலவழிக்க நினைப்பது திராவிட மாடல்! இவ்வாறு அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.