எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு... உயர்நீதி மன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெண்டர் முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு விசாரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

S P Velumani tender malpractice case  Supreme Court displeased with High Court investigation

 எஸ்.பி. வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு  தடைவிதிக்க முடியாது. லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்  உததரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில்  எஸ்.பி.வேலுமணி தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வந்தார், ஆனால்  முன்னாள்  அமைச்சர் ஒருவர்  மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது,ஆனால், மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதேபோல, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை டிவிசன் அமர்வு விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

S P Velumani tender malpractice case  Supreme Court displeased with High Court investigation

அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை.. இந்த புருடா விடுற வேலை எல்லாம் இங்க வேணாம்-மு.க.ஸ்டாலின் கிண்டல்

இந்நிலையில் தான், இதனை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு அவசர வழக்காக, உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி, பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்த உத்தரவு எந்த வகையிலானது ? எவ்வாறு இப்படி ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் ? என விமர்சித்ததோடு அதிருப்தி தெரிவித்தனர். அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின்  இந்த மனுவானது  ஏற்கனவே இது  தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள  வழக்கோடு இணைத்து விசாரிப்பதாக உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு தெரிவித்தது. ஏனெனில் இந்த  கோரிக்கைகள் ஒரே மாதிரியானவை தான் என தெரிவித்தார். ஆனால் அதற்கு கடும் ஆட்சேபம் தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனு என்பது கிரிமினல் குற்றம் தொடர்புடையது அதை முறைப்படி தனி நீதிபதி தான் விசாரிக்க முடியும் ஏனெனில் முன்னதாக எஸ்.பி.வேலுமணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல்நிலை விசாரணை அறிக்கையின் நகலை கொடுக்க உத்தரவிட்ட வழக்கே தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளது. 

S P Velumani tender malpractice case  Supreme Court displeased with High Court investigation

பொய்யை சொல்லி மாணவர்களை ஏமாற்றிய திமுக..! ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

ஆனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை (FIR.ஐ) ரத்து செய்ய புதிய மனுவை வேலுமணி தாக்கல் செய்துள்ளார், அது சொத்து குவிப்பு குற்றச்சாட்டை தொடர்புடைய கிரிமினல் வழக்கு எனவே இதை கிரிமினல் வழக்கு விசாரணை முறைப்படி தனி நீதிபதி தான் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் வேலுமணி தொடர்பான வழக்கில் தனது இடைக்கால உத்தரவை பிறப்பிக்கட்டும், அதன் பின்னர் அந்த உத்தரவை பார்த்து விட்டு இந்த மனுவை விசாரிக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு என்பது  உச்சநீதிமன்றத்தில் உள்ள தற்போதைய மேல்முறையீட்டு வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படியுங்கள்

மருத்துவ படிப்பு இல்லன்னா என்ன வேற எத்தனையோ படிப்பு இருக்கு! தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்! மன்றாடி கதறும் வைகோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios