மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் ரீ என்ட்ரி.. ஓபிஎஸ் அணி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அழைப்பு?

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ready to join AIADMK if you give me an apology letter... edappadi palanisamy announced

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

இதையும் படிங்க;-  ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு ஆச்சு.. கொடநாடு வழக்கு நிலை என்ன? இபிஎஸ்க்கு எதிராக திமுகவை உசுப்பேற்றும் ஓபிஎஸ்

ready to join AIADMK if you give me an apology letter... edappadi palanisamy announced

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என இபிஎஸ் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணியில் சென்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அழைக்கும் விதமாக இபிஎஸ் அறிவிப்பு உள்ளது. 

இதையும் படிங்க;-  அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios