அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருவாருர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ், இவரது மூத்த மகனான டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனாரான சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர்கள் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை குவித்ததாக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு ஆச்சு.. கொடநாடு வழக்கு நிலை என்ன? இபிஎஸ்க்கு எதிராக திமுகவை உசுப்பேற்றும் ஓபிஎஸ்
விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் கூட்டாக தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தின் பெயரில் சொத்துகளை வாங்கி உள்ளார்.
இதையும் படிங்க;- 50 நாட்களில் 3 பாமக நிர்வாகிகள் கொலை! கூலிப்படையினரின் கூடாரமாக மாறும் செங்கல்பட்டு! அன்புமணி அதிரடி முடிவு.!
அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன் மற்றும் இன்பன் ஆகியோர்களின் பெயரில் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் பன்னோக்கு மருத்துவமனை கட்டியும், இதர வகைகளில் 127 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இந்த வழக்கு திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காமராஜுக்கு எதிராக 810 பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.