Asianet News TamilAsianet News Tamil

இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல.. ஆதாரத்துடன் ஸ்டாலின் அரசை இறங்கி அடிக்கும் அண்ணாமலை..!

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் எதிர்க்கட்சிகளாக அதிமுக, பாஜக கட்சிகள் குற்றம்சாட்டினர். 

Re order for companies that supplied substandard Pongal gifts.. Annamalai criticized
Author
First Published Oct 1, 2022, 8:06 AM IST

கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் எதிர்க்கட்சிகளாக அதிமுக, பாஜக கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, தரமற்ற பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- பாஜக மாநில நிர்வாகி திடீரென பதவி விலகல்... இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Re order for companies that supplied substandard Pongal gifts.. Annamalai criticized

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. 

Re order for companies that supplied substandard Pongal gifts.. Annamalai criticized

தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது. 

பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான  4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. 

Re order for companies that supplied substandard Pongal gifts.. Annamalai criticized

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான் இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்ணீர் தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல என அண்ணாமலை காட்டமாக பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி

Follow Us:
Download App:
  • android
  • ios