பாஜக மாநில நிர்வாகி திடீரென பதவி விலகல்... இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்டாக அறியப்படுவர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி.  

bjp leader balaji thangavel Resign

தமிழகம் முழுவதும் ‘மோடி கபடி லீக்’ போட்டிகள் நடந்துவந்த வேளையில், தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல் திடீரென கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் அந்த பதவியில் இருந்து விலகியதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்டாக அறியப்படுவர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி.  இவர் சமீபத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவியை அண்ணாமலை காலில் விழச் சொல்லி சிக்னல் கொடுத்து சிக்கலில் சிக்கியவர். இந்நிலையில், இவருக்கும், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

bjp leader balaji thangavel Resign

மேலும், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த இந்த மோடி கபடி லீக் போட்டி ஏற்பாடுகளில் துணை தலைவர் பாலாஜி தங்கவேல், அக்னி ராஜேஷ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தனர். ஆனால், அமர் பிரசாத் ரெட்டி தலைமையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் தன்னை மட்டுமே முன்னிறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாலாஜி தங்கவேல் அதிருப்தியில் இருந்துள்ளார். 

bjp leader balaji thangavel Resign

இந்நிலையில் தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பததவியை பாலாஜி தங்கவேல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் அவர் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக எச்.ராஜா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படத்தில் பாலாஜி தங்கவேல் செங்கல்பட்டு என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios