வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. நீட்டால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. ராமதாஸ்

நீட் தேர்வில் தோல்வி அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என  பா.ம.க. நிறுவனர்  இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramadas expressed grief over the death of a student from Tenkasi due to fear of NEET examination

நீட் தேர்வு- அச்சத்தில் மாணவர்கள்

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முந்தைய அதிமுக அரசும் தற்போதைய   திமுக அரசும் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு  கிடப்பில் போட்டுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. தற்போது  நீட் தேர்வு அச்சத்தால் தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் 3வது முறையாக மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமா என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என்ன காரணம் தெரியுமா..?

Ramadas expressed grief over the death of a student from Tenkasi due to fear of NEET examination

மாணவி தற்கொலை

இந்தநிலையில் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக  தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்! மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே  இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை  புரிந்து கொள்ள முடியும்!

 

நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர்  ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு.  வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்! ஏற்கனவே  பல்லாயிரம் முறை நான்  கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே  தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலக கொள்ளை வழக்கு...! ஓபிஎஸ் நேரில் ஆஜராக சிபிசிஐடி உத்தரவா..?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios