அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என்ன காரணம் தெரியுமா..?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமித்ஷாவை சந்திக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுவை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு
மாநிலங்களின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படும். தற்போது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய தென்மண்டலக் கூட்டமானது நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இனி மக்களிடம் இருந்து திமுக தப்பிக்க முடியாது.. ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்.. வானதி சீனிவாசன்..!
அமித்ஷாவை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களிடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது வரை 29 தென்மண்டலக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சனை குறிப்பாக முல்லை பெரியாறு, மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக புகார் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ஸ்.. அசால்டாக தப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!
பினராயி விஜயனோடு ஆலோசனை
முன்னதாக கோவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் கேரளா செல்கிறார். அப்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து தமிழகம் - கேரளாவிற்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதையும் படியுங்கள்