Asianet News TamilAsianet News Tamil

ரஜினி மிக ஆபத்தான மனுஷன்! இதை அத்தனை பேரும் புரிஞ்சுக்குங்க: லேடி டாக்டரின் ஷாக் ஸ்டேட்மெண்ட்!

ரஜினி பற்றிய விமர்சனங்களின் போது அவரை ஏதோ தேவ தூதன் போலவும், தமிழ் மக்களை ரட்சிக்க வந்த இறை வடிவம் போலவும், ரஜினி தேர்தலில் நின்றால் நூறு சதவீத வாக்கு வங்கியும் அவரை ஆதரிக்கும் என்றும், ரஜினி முதல்வரானதும் இந்தியாவிலேயே மிக முதன்மையான மாநிலமாக தமிழகம் மாறிவிடும்! என்றெல்லாம் ஒரு தரப்பினர் அவரை ஆதரித்துப் பேசுகின்றனர். 

Rajinikanth is a dangerous man!: says a lady Doctor
Author
Chennai, First Published Feb 14, 2020, 3:41 PM IST

ரஜினி மிக ஆபத்தான மனுஷன்! இதை அத்தனை பேரும் புரிஞ்சுக்குங்க: லேடி டாக்டரின் ஷாக் ஸ்டேட்மெண்ட்!

இந்த உலகம் உனக்கு எவ்வளவு அள்ளிக் கொடுக்கிறதோ....அதே அளவுக்கு  நீயும் அதற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்! என்பார்கள். ரஜினிகாந்த் விஷயத்தில் இது மிக தெளிவாக உறுதியாகி இருக்கிறது. இன்னும் கட்சி துவங்காத, அரசியலுக்கு வராத நிலையிலும் கூட தமிழக அரசியலே ரஜினிகாந்தை மையப்படுத்திதான் சுழல்கிறது. இவ்வளவு ஏன் இந்திய அரசியல்வாதிகளும் அவரை ரெஃபர் செய்துதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்று விவாதங்கள்  ஒருபுறம், ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு யாருக்கு நன்மை ? என்று அலசல்கள் மறுபுறம், ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும்? என்றெல்லாம் தாறுமாறாக அவரை வைத்து அரசியல் விமர்சனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 

Rajinikanth is a dangerous man!: says a lady Doctor

ரஜினி பற்றிய விமர்சனங்களின் போது அவரை ஏதோ தேவ தூதன் போலவும், தமிழ் மக்களை ரட்சிக்க வந்த இறை வடிவம் போலவும், ரஜினி தேர்தலில் நின்றால் நூறு சதவீத வாக்கு வங்கியும் அவரை ஆதரிக்கும் என்றும், ரஜினி முதல்வரானதும் இந்தியாவிலேயே மிக முதன்மையான மாநிலமாக தமிழகம் மாறிவிடும்! என்றெல்லாம் ஒரு தரப்பினர் அவரை ஆதரித்துப் பேசுகின்றனர். 

அதேவேளையில் இன்னொரு தரப்போ...ரஜினியை சும்மா கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டுள்ளனர். அப்படி கிழிப்போர் வரிசையில் டாக்டர் ஷாலினியும் ஒருவர். ரஜினி பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளித்திருக்கும் ஷாலினி....

“ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். ரஜினி எனும் தனி நபரைப் பற்றி எந்த அபிப்ராயமும் எனக்கு இல்லை. ஆனால் அவர் ‘தலைவர்’ எனும் அந்தஸ்துக்கு வரும்போது, இவரால் தமிழகத்துக்கு ஏதாவது நன்மையை ஏற்படுத்த முடியுமா? எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. தனி நபர் என்பது வேறு, தலைவர் என்பது வேறு. அவர் தலைவராக தமிழகத்துக்கு பயன் உள்ளவராக இருப்பார் எனச் சொல்ல முடியாது. இதைப் பற்றி சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. 

இதைச் சொல்ல எனக்கு உரிமையில்லை என ரஜினி ரசிகர்கள் சொன்னால், அவர்கள் பாசிஸ்ட்தானே? இப்போதே அப்படி என்றால் நாளை அதிகாரத்தைக் கைப்பற்றினால் என்ன செய்வார்கள். இதையெல்லாம் தாண்டி, எதிர்காலத்துக்காக சில முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. ரஜினி ஆபத்தானவர் என்பதை அவரது ரசிகர்கள் அனைவரும் உணர வேண்டும்.” என்கிறார். 

”ரஜினிக்கு எதிராக டாக்டரம்மா சொல்லும் கருத்தில் அப்படியொன்னும் ஆழம் இல்லையே! அதிலும், ஆபத்தானவரா சித்தரிக்கிற அளவுக்கு ரஜினி என்ன பண்ணிட்டார்! இந்து தெய்வங்களை வணங்கும் நபரா அவர் இருக்குறதுதான் ஷாலினி உள்ளிட்ட ஆளுங்களுக்கு பிரச்னைன்னு நல்லாவே தெரியுது!” என்கிறார்கள் விமர்சகர்கள். 
இதுவும் கரெக்டான பாயிண்ட் தான்!

-    விஷ்ணுப்ரியா

Follow Us:
Download App:
  • android
  • ios