ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டாலும், அண்ணாமலை உருண்டே வந்தாலும் தமிழகத்தில் பாஜக ஜெயிக்க முடியாது- திமுக

கலைஞரின் பேனா பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்,  எடப்பாடி பழனிச்சாமி வெள்ளமண்டி வைத்திருப்பார்,  வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

Raja Kannappan has said that BJP will not win a single seat in Tamil Nadu in the parliamentary elections

அண்ணாமலை நடை பயணம்

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில்  பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின்   நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகரி பாராளுமன்ற உறுப்பினருமான  ஆ ராசா  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  அப்போது பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், பாஜக யாருடன் கூட்டணி வைத்தாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி  பெரும். அண்ணாமலை நடை பயணம் வருகிற 28ஆம் தேதி தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

Raja Kannappan has said that BJP will not win a single seat in Tamil Nadu in the parliamentary elections

ராமநாதபுரத்தில் பாஜக வெற்றி பெற முடியாது

அவர்  நடந்தல்ல உருண்டே வந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது . மக்கள் திமுக பக்கம் உள்ளனர். திமுக ஆட்சியின் மீது எந்த குற்றச்சாட்டும் இந்த இரண்டு ஆண்டுகளில் சொல்ல முடியவில்லை . இரட்டை இலைக்கு இனி ஓட்டுவிழாது. அது எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தோடு முடிந்து விட்டது.  ராமநாதபுரம் மோடி நிற்பதாக கூறுகிறார்கள்,  யார் எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்திற்கு வேறு தலைவர்கள் இல்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் இருக்கிறார்.அடுத்தது உதயநிதி இருக்கிறார். தமிழகத்தின் தயவு இல்லாமல் இனி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாட்டின் அடுத்த பிரதமரை முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். 

Raja Kannappan has said that BJP will not win a single seat in Tamil Nadu in the parliamentary elections

அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்

இதனையடுத்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசுகையில்,  பாஜகவினரிடம் கொள்கை இல்லை அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை சித்தாந்தம் உள்ளிட்டவைகள் கொண்ட ஒரே இயக்கம் திமுக என்பதால் பாஜகவினர் நம்மை கண்டு பயப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கலைஞருக்குத் தான் உண்டு. கலைஞரின் பேனா பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்,  எடப்பாடி பழனிச்சாமி வெள்ளமண்டி வைத்திருப்பார்,  வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார். அம்பேத்காரால் கூட பெண்களுக்கு சமூக உரிமை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவர முடியவில்லை கலைஞர் அந்த சட்டத்தை 1989இல் இந்தியாவிற்கு வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் அந்த சட்டத்தை கொண்டு வந்தார்.  

Raja Kannappan has said that BJP will not win a single seat in Tamil Nadu in the parliamentary elections

மோடிக்கு தேச பக்தி

மோடிக்கு தைரியமும் துணிச்சலும் மனவலிமையும் இருந்தால் அதானி விவகாரம் தொடர்பாக வாய் திறந்து பேசட்டும்.  இந்திய படை வீரர்கள் 48 பேர் பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடிக்கு தேச பக்தி வந்து விட்டது. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை கொன்று விடுகிறார்கள்.

 மோடி மீது அப்போது கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். உயர் அதிகாரிகள் அனைவரும் எனது வாயை அடைத்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார்  தேர்தலுக்காக ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு 2019ல் ஆட்சிக்கு பாஜக வந்ததாக ஆ.ராசா விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட அதிமுகவால் மட்டுமே முடியும்..! மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து எடப்பாடி மடல்
   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios