“காங்கிரஸ் 2.0 - ராகுல் காந்தி போட்ட புது ஸ்கெட்ச் !” எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தலைவர்கள்.!
ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி. மீ. தூரத்தை 150 நாட்களில் நடந்து கடக்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரையை தொடங்க இருக்கிறார். இது தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி. மீ. தூரத்தை 150 நாட்களில் நடந்து கடக்கிறார். நடைபயணத்தின் முக்கிய நோக்கம், இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான். வரலாற்று சிறப்புமிக்க இந்த நடைபயணம் நமது மாநிலத்தில் இருந்து தொடங்குவது நமக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!
இந்த தேசத்தின் இறையாண்மையை காப்பாற்றுவதற்காக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மக்களிடையே ஒற்றுமையை பரப்புவதற்கான இந்த நடைபயணத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். இது ஒரு நீண்டதூர நடைபயணம் ஆகும். தெலுங்கானாவில் மத்திய நிதி அமைச்சர் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நடந்து கொண்ட விதம் தவறு என்பது என்னுடைய கருத்து.கேரளாவில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய கருத்துக்கள் மிகவும் சரியானதுதான். ராகுல்காந்தி நடைபயண நேர விவரத்தை நாளை வெளியிடுவோம். மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாகவோ, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலோ நோக்குவது கிடையாது.
மேலும் செய்திகளுக்கு..Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?
மோடி அவ்வளவு பெருந்தன்மையானவர் அல்ல. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை பெரிதாக அவர் மனதில் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது எனது கருத்து. கன்னியாகுமரி- காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சியாகும். சமூக மாற்றத்தை மனதில் வைத்து இந்த நடைபயணத்தை நாங்கள் தொடங்குகிறோம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !