Asianet News TamilAsianet News Tamil

“பெண்களை சக்தியின் வடிவமாக பார்க்கும் மாமனிதர்..” பிரதமர் மோடிக்கு ராதிகா சரத்குமார் புகழாரம்...

பெண்களை சக்தியின் வடிவமாக பார்க்கும் மாமனிதர் என்று பிரதமர் மோடிக்கு ராதிகா சரத்குமார் புகழாரம் சூட்டி உள்ளார்

Radhika Sarathkumar praises Prime Minister Modi who sees women as a form of power" Rya
Author
First Published Mar 16, 2024, 3:15 PM IST | Last Updated Mar 16, 2024, 3:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மோடி மோடி என்று முழக்கம் எழுப்பினர். மேடைக்கு வந்த மோடி பாஜக நிர்வாகிகளையும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வணக்கம் செலுத்தினார். 

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், அவரின் மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோரை அண்ணாமலை மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே சரத்குமாரின் கைகளை பிடித்து வணக்கம் தெரிவித்த மோடி, ராதிகாவுக்கு வணக்கம் கூறி நலம் விசாரித்தார்.

“இதில் எனக்கு உடன்பாடு இல்லை” மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி..

இந்த நிலையில் பிரதமரை சந்தித்த போது எடுத்த போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா சரத்குமார், மோடிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். அவரின் பதிவில் “ "பெண்களின்றி பெருமையுமில்லை, கண்களின்றி காட்சியுமில்லை" என்றொரு பழமொழி உண்டு. மக்களவை மற்றும் சட்டப்பேரவையில்  பெண்களுக்கென 33% இடஒதுக்கீடு கொடுத்து அவர்களை அங்கீகரித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். பெண்களை சக்தியின் வடிவமாக பார்க்கும் ஒரு மாமனிதரை இன்று முதன்முறையாக மேடையில் சந்தித்தது எனது பெருமையே! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார் “ என் கணவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பாஜக உடன் இணைந்த பிறகு முதன்முறையாக இந்த மேடையில் நாட்டின் நாயகன் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். எங்கு சென்றாலும் திருக்குறளை சொல்லி, தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்து வருகிறார். 
நான் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகள்..400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.

ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. விட்டதை பிடிக்க இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல்..!

ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து மேடையில் பேசும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை, பெருமை இருக்கிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் தலைவன் நன்றாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். இதோடு நின்று விடாமல் 2026 தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். பாஜக வெற்றி தமிழகம் வரை தொடர வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios