இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால்... ரஜினிக்கு டஃப் கொடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது குறித்து அதிமுக தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது குறித்து அதிமுக தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்.
இதையும் படிங்க;- ஆணவக் கொழுப்பில் வாய் கூசாமல் பேசிய ஆர்.எஸ்.பாரதி... கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்றார். திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு இரு தினங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.