ஆணவக் கொழுப்பில் வாய் கூசாமல் பேசிய ஆர்.எஸ்.பாரதி... கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..!
கடந்த 14-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
கொச்சையான வார்த்தை சொன்ன ஆர்.எஸ்.பாரதியை எந்த ஊடகமும், பத்திரிக்கையும் கண்டிக்கவில்லை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது எனச் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- கொச்சையான வாரத்தை சொன்ன ஆர்.எஸ்.பாரதியை எந்த ஊடகமும், பத்திரிக்கையும் கண்டிக்கவில்லை. அதற்காக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தீர்களாக என கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களை இதைவிட எப்படி கேவலமாக பேசமுடியும். கீழ் தரமான வார்த்தையை வாய் கூசால் பேசியுள்ளார். அதற்கு நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களுடைய கட்சி சார்ந்த விளம்பரம் மற்றும் செய்திகள் தான் அடிக்கடி வருகிறது.
நாங்கள் நல்ல திட்டங்களை அறிவித்தாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கு செய்கின்ற நல்ல நல்ல திட்டங்களை எடுத்து சொன்னால் தான் இப்படிபட்டவர்கள் கீழ் தரமாக பேசமாட்டார்கள். பட்டியலினத்தவர் பற்றி ஆர்.எஸ்.பாரதி பேசியது ஆணவத்தின் உச்சம். மேலும், திமுக போட்ட பிச்சை என்று தரக்கூறைவாக பேசியுள்ளார். ஆணவக் கொழுப்பில் பேசிய வார்த்தை மிகவும் கண்டித்தக்கது என முதல்வர் கூறியுள்ளார்.