இவ்வளவு போராடியும் கிடைக்கலையே..! அதிமுக மீது கடும் கோபத்தில் பிரேமலதா..!
தற்போது ஜி.கே.வாசனுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டிருப்பது பிரேமலதாவை கோபப்படுத்தி இருக்கிறது. தாமகவை விட அதிக வாக்கு வங்கியை தேமுதிக வைத்திருக்கும் நிலையில் தங்களுக்கு ஒதுக்காமல், ஜி.கே.வாசனுக்கு கொடுத்திருப்பது அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாகியிருக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. திமுகவா? அதிமுகவா? என இறுதி வரை தேமுதிக தலைமை மாறிமாறி பேசி வந்த நிலையில் 4 தொகுதிகளுடன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது. அப்போது தேமுதிகவிற்கு மாநிலவங்களையில் ஒரு எம்.பி பதவி கொடுப்பதாக அதிமுக கூறியுள்ளது. ஆனால் அதுகுறித்து ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
பாமகவிற்கு மாநிலங்களவை பதவி கொடுப்பது குறித்து கூட்டணி ஒப்பந்தத்தில் இருகட்சிகளும் கையெழுத்திட்டிருந்தனர். அதன்படி பாமகவிற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டு அதிமுக தயவில் அன்புமணி எம்.பி ஆனார். இதனிடையே தற்போது தமிழகத்தின் சார்பாக 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. அவற்றில் திமுகவும் அதிமுகவும் தலா 3 உறுப்பினர்களை பெறும் சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தான் அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடத்தை கேட்டுள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுக்க அதிமுக தொடர்ந்து மறுத்து வந்தது.
தமிழகத்தை அலற விடும் கொரோனா..! திமுக எடுத்த அதிரடி முடிவு..!
இதனிடையே தற்போது அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு இடம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மேலிடத்தின் நெருக்கடி காரணமாக ஜி.கே.வாசனுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது தேமுதிகவை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதுகுறித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். ஆனால் தேமுதிகவிற்கு இடமளிக்க அதிமுக மறுத்து வந்தது. இந்தநிலையில் தான் தற்போது ஜி.கே.வாசனுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டிருப்பது பிரேமலதாவை கோபப்படுத்தி இருக்கிறது. தாமகவை விட அதிக வாக்கு வங்கியை தேமுதிக வைத்திருக்கும் நிலையில் தங்களுக்கு ஒதுக்காமல், ஜி.கே.வாசனுக்கு கொடுத்திருப்பது அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாகியிருக்கிறது.
அச்சுறுத்தும் கொரோனா..! சென்னை விமானங்கள் அதிரடி ரத்து..!
இதனால் கூட்டணியை முறித்துக்கொள்வது குறித்து கட்சி தலைமை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறினால் தேமுதிக தனித்து விடப்படும் என்பதால் அதுபோன்ற விஷப்பரீட்சையில் பிரேமலதா இறங்க மாட்டார் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.