தமிழகத்தை அலற விடும் கொரோனா..! திமுக எடுத்த அதிரடி முடிவு..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில் அதுகுறித்து விவாதிப்பதற்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான மனுவை சபாநாயகரிடம் திமுக உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.
2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த 14 ம் தேதி நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதன்பிறகு 4 நாட்கள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற பிறகு கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று காலை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்பழகன் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன், கே.பி.பி. சாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. புதன்கிழமை சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது. அன்றிலிருந்து துறை ரீதியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற இருக்கின்றன.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில் அதுகுறித்து விவாதிப்பதற்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான மனுவை சபாநாயகரிடம் திமுக உறுப்பினர்கள் அளித்துள்ளனர். அதுதொடர்பான மனுவை சபாநாயகரிடம் திமுக உறுப்பினர்கள் அளித்துள்ளனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.