தயவுசெய்து நாட்டில் வன்முறையை நிறுத்துங்கள் என ஜெஎன்யூ மாணவர்கள் தாக்குதல் குறித்து பாஜக அரசுக்கு சன்னிலியோன் அட்வைஸ் தெரிவித்துள்ளார் .  மேலும் தனக்கு  வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லை ,  வன்முறை இல்லாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் .  தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .  மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மூது ரவுடி கும்பல்  தாக்குதல் நடத்த்தியது. 

 

இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக அமைப்பினர் ,  அரசியல் கட்சி தலைவர்கள் ,  மற்றும் திரை பிரபலங்களும் ,  மாணவர்கள் மீதான தாக்குதலை வெகுவாக  கண்டித்து வருகின்றனர் .  இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நட்சத்திரங்கள்,  அனுராக் காஷ்யப் ,  நடிகை டாப்ஸி ,  தியா மிர்சா ,  ஜோயா அக்தர் ஆகியோர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பினர் அதேபோல் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் நடிகை சன்னி லியோனும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார் அதில், 

"எனக்கு வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லை வன்முறை இல்லாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என நம்புகிறேன் இப்போது மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் அதில் பாதிக்கப்பட்டது மாணவர்கள்  மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினரும் தான்,  அவர்களது குடும்பம் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளது உடனேயே வன்முறையை நிறுத்துங்கள் "  என ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும்  பிரச்சனையில் யாரும் பாதிக்காத வகையில் இதற்கு ஒரு நல்ல முடிவை காணவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.